பாஜக நடத்துவது அரசியல் சித்து விளையாட்டு - அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றச்சாட்டு
காரவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து காெண்டு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே காரவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் புதிதாக அமைக்கப்பட்ட லாக்கரை தமிழக தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு வகுத்த விதிமுறைகளே தமிழகத்தில் நடைமுறைப்படுத்தபட்டு வருகிறது. அதன் அடிப்படையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி தினங்களில் வழிபாட்டு தலங்களில் தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
இந்த விதிமுறைகளுக்கு மாறாக ஆலய நுழைவு போராட்டம் என்ற பெயரில் பாஜகவினர் பொதுமக்களிடையே பிரிவினையை தூண்டி வருகின்றனர். அவர்களது போராட்டத்தை மத்திய அரசுக்கு எதிராக நடத்தியிருக்க வேண்டும். பாஜக நடத்தும் இந்த போராட்டம் அரசியல் சித்து விளையாட்டு என குறிப்பிட்ட அமைச்சர் மனோ தங்கராஜ் பாஜகவின் போராட்டத்திற்கு தனது கண்டனத்தை தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu