தமிழக முதல்வரை அவதூறாக பேசியதாக பாஜக பிரமுகர் கைது - காவல் நிலையம் முற்றுகை
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் கடந்த ஆறாம் தேதி நடந்த பாஜக சாதனை விளக்க கூட்டத்தில் பாஜக மாவட்ட பிரச்சார அணி தலைவர் ஜெயபிரகாஷ் தமிழக முதல்வரை அவதூறாக பேசியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுகவினர் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து ஜெயப்பிரகாஷை ஆரல்வாய்மொழி போலீசார் கைது செய்தனர், இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆரல்வாய்மொழி பகுதியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் திமுக நிர்வாகி ஒருவர் பாரத பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசினார்.
அதற்கு பதிலளிக்கும் விதத்தில் ஜெயபிரகாஷ் பேசியதாகவும் பிரதமர் மோடி குறித்து அவதூராக பேசியவர் மீது நடவடிக்கை எடுக்காமல் தமிழக முதல்வர் குறித்து பேசியவர் மீது நடவடிக்கை எடுத்து காவல் துறையினர் பாரபட்சமாக நடப்பது ஏன் என கேட்டு பாஜகவினர் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பாஜகவினர் கலந்துகொண்டு காவல்துறைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu