குமரியில் 107 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை, மற்றும் குட்கா பறிமுதல்

குமரியில் 107 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை, மற்றும் குட்கா பறிமுதல்
X

குளச்சல் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட 107 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருட்கள்.

குமரியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 107 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பறிமுதல்.

கன்னியாகுமரி மாவட்டதில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து அனைத்து காவல் நிலைய போலீசாரும் தங்கள் காவல் நிலைய எல்லை பகுதியில் கண்காணிப்பை தீவிரப்டுத்தி உள்ளனர். இந்நிலையில் குளச்சல் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சணல் குமார், குளச்சல் பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் உரிமையாளர் சந்தேகபடும்படியாக இருந்ததால் அந்த கடையை நடத்தி வருபவரை பிடித்து விசாரணை செய்த போது அவர் வாணியகுடி பகுதியை சேர்ந்த வின்சிலின் பாபு(48) என்பது தெரிய வந்தது.

தொடர்ந்து அவரது கடையை சோதனை செய்த போது அவர் சட்டவிரோதமாக உடலுக்கு கேடு விளைவிக்ககூடிய தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர்.

பின்பு அவரிடமிருந்த 60,000 ரூபாய் மதிப்புள்ள 107 கிலோ புகையிலை, குட்கா பொருட்கள் மற்றும் 13,260 ரூபாயை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு