குமரியில் முன் அறிவிப்பின்றி தரிசனத்திற்கு தடை, பக்தர்கள் போராட்டம்

குமரியில் முன் அறிவிப்பின்றி தரிசனத்திற்கு தடை, பக்தர்கள் போராட்டம்
X

குமரியில் முன் அறிவிப்பு இன்றி கோயில்களில் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டதால், பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குமரி கோவில்களில் முன் அறிவிப்பின்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களான சுசீந்திரம் தானுமாலயன் சுவாமி கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் ஞாயிற்று கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.

குறிப்பாக நாக தோஷம் உட்பட தோஷங்கள் நீக்கும் நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஞாயிற்று கிழமையில் சுவாமி தரிசனம் செய்தால் தோஷங்கள் நீங்கும் என்பதால் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாகராஜா கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும்.

இந்நிலையில் எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி இன்று முதல் மூன்று நாட்களுக்கு குமரி கோவிலில் வழிபாடு செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதன் காரணமாக உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்த வந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் இந்து கோவில்கள் தரிசனத்திற்கு மட்டும் தடை விதித்து அரசு எடுக்கும் நடவடிக்கைகளை கண்டித்து பல்வேறு கோவில்களின் முன் பாஜக வினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!