கோவில் நிலத்தை அபகரிக்க முயற்சி: இந்து மகா சபா அமைப்பினர் புகார்

கோவில் நிலத்தை  அபகரிக்க முயற்சி:    இந்து மகா சபா அமைப்பினர் புகார்
X
கோவில் சொத்துக்களை அபகரிக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: இந்து மகா சபா பாலசுப்ரமணியம் எச்சரிக்கை

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் கோவில் நிலத்தை அபகரிக்க தமிழக அரசு முயற்சி செய்வதைக் கண்டித்து இந்து மகா சபா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் அமைந்துள்ள கோவிலையும் கோவில் சொத்துகளையும் அபகரிக்க நினைப்பதோடு கோவிலுக்கு பக்தர்கள் செல்ல விடாமல் கோவிலை சீரழிக்கும் இந்து அறநிலையத்துறையின் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்து, ஊர் பொது மக்களுடன் இணைந்து அகில பாரத இந்து மகா சபா அமைப்பினர் குளச்சல் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் அமைந்துள்ள செட்டு சமுதாயத்திற்கு சொந்தமான 700 ஆண்டு கால பழமையும் பிரசித்தியும் பெற்ற தேசு விநாயகர் கோவிலையும் அந்த கோவிலுக்கு சொந்தமான சுமார் ரூ. 30 கோடி மதிப்பிலான சொத்துகளையும் இந்து அறநிலைத்துறை அபகரிக்க முயற்சி செய்த நிலையில் இதனை தடுக்கும் தடுக்கும் வகையில் கோவிலில் பக்தர்கள் ஒன்றுகூடி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவில் வழிபாடுகளையும் கோவில் பராமரிப்பு பணிகளையும் இந்து அறநிலைத்துறை தடுத்து நிறுத்தியதால் கோவில் சுவர்கள் இடிந்து பராமரிப்பு இன்றியும், புதர்கள் மண்டியும் காணப்படுகின்றது, இதன் காரணமாக பாம்பு உள்பட பல்வேறு விஷ விலங்குகள் கோவிலில் சர்வசாதாரணமாக உலாவி வருவதால் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், குளச்சலில் நடைபெற்ற போராட்டத்தில் அகில பாரத இந்து மகா சபா அமைப்பின் தேசிய துணைத் தலைவரும் தமிழ் மாநில தலைவருமான தா. பாலசுப்ரமணியம் கலந்துகொண்டு பேசுகையில், சமுதாய மற்றும் கிராம கோவில்களையும் கோவிலுக்கு சொந்தமான சொத்துகளையும் அபகரிக்க நினைத்தால் இந்து அறநிலைய துறை கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் தேசு விநாயகர் கோவிலை அந்த சமுதாய மக்கள் வசம் ஒப்படைக்காவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் குறிப்பிட்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!