போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு : குமரி காவல்துறை ஏற்பாடு
குளச்சல் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜானகி தலைமையில் பள்ளி மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவிகளுக்கும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவிட்டார். அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில், மாணவிகளிடையே போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில், குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜானகி தலைமையில் குளச்சல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பள்ளி மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும் அந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் போதை பொருளுக்கு பழகிகொள்வதை தடுக்க என்ன செய்யவேண்டும், போதை பொருள்கள் பயன்படுத்துதல் சம்பந்தபட்ட தகவல்களை காவல்துறைக்கு அறிவித்தல் குறித்தும் விளக்கப்பட்டது.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய தகவல்களை மறைக்காமல் உடனடியாக காவல்துறைக்கு தெரிவித்தல், குழந்தைகளை பாலியல் துன்புறுத்துதலில் இருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டம் மற்றும் குழந்தைகள் திருமண தடுப்பு சட்டம் குறித்தும், நடைமுறைகள் குறித்தும் விளக்கிக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu