குமரியில் அரசு நலத்திட்ட மாற்றம் குறித்து மீனவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்
இரையுமன்துறை மீனவ கிராமத்தில் அரசால் சமூக நலத்துறை நலத்திட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம் குறித்து மீனவர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
தமிழகத்தில் சமூக நலத்துறை சார்பில் திருமணமான பெண்களுக்கு வழங்கப்படும் தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் அரசின் சார்பில் வழங்கப்படும் உதவிகள் பெறுவதில் தமிழக அரசால் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் மற்றும் அதனை எவ்வாறு பெறுவது என்பது குறித்தும் பெண்கள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலன் குறித்து விழிப்புணர்வு முகாம் தூத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட இரையுமன்துறை மீனவ கிராமத்தில் நடைபெற்றது.
மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சரோஜினி தலைமையில் குளச்சல் சரக துணை காவல் கண்காணிப்பாளர் தங்கராமன் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜானகி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் மீனவ கிராமங்களை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு அரசு அதிகாரிகள் கூறிய அறிவுரைகளை பெற்று பயன் அடைந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu