குமரியில் 83 புதிய காவலர்களுக்கு பணி நியமன ஆணை: எஸ்பி வழங்கல்

குமரியில் 83 புதிய காவலர்களுக்கு பணி நியமன ஆணை: எஸ்பி வழங்கல்
X

குமரியில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட காவலர்களுக்கு பணி நியமன ஆணையை எஸ்.பி பத்ரிநாராயணன் வழங்கினார்.

குமரியில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட காவலர்களுக்கு பணி நியமன ஆணையை எஸ்.பி வழங்கினார்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட ஆண் மற்றும் பெண் காவலருக்கான தேர்வில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 69 ஆண்கள், 14 பெண்கள் உட்பட 83 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பணி நியமன ஆணையை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் வழங்கினார்.

முன்னதாக தேர்வான காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து வாழ்த்துக்களை கூறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.

மேலும் தேர்வில் தேர்ச்சி பெற்று காவலராக தேர்வு செய்யப்பட்டு உள்ளவர்கள், தங்களது பணியை நேர்மையுடனும், பொறுப்புடனும் திறம்பட செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!