அதிக பாரம் ஏற்றி வந்த கனரக வாகனங்கள் மீது வழக்கு பதிவு.

அதிக பாரம் ஏற்றி வந்த கனரக வாகனங்கள் மீது வழக்கு பதிவு.
X
குமரியில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிக பாரம் ஏற்றி வந்த கனரக வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் உள்ள நிலையில் வாகனங்களின் விதி மீறிய போக்குவரத்தால் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் பல கனரக வாகனங்கள் அதிக பாரம் ஏற்றி வேகமாக வருவதாகவும் இதன் காரணமாக விபத்துக்கள் நடைபெருவதாகவும் புகார்கள் இருந்து வந்தன.

வாகன விபத்தை தடுக்கும் வகையில் வாகன சோதனையை தீவிரப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி இன்று ஒருநாள் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற வாகன சோதனையில் அதிக பாரம் ஏற்றி வேகமாக வந்த 111 கனரக வாகனங்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறும் போது தொடர்ந்து வாகன சோதனை நடைபெரும் என்றும், அதிக பாரம் ஏற்றி வேகமாக வரும் கனரக வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil