வீடுகளுக்குள் மழை வெள்ளம்: 9 கிராமங்களுக்கு போக்குவரத்து நிறுத்தம்

வீடுகளுக்குள் மழை வெள்ளம்: 9 கிராமங்களுக்கு போக்குவரத்து நிறுத்தம்
X

வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்.

குமரியில் கனமழை காரணமாக 9 கிராமங்களுக்கு பொதுபோக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கன மழையின் காரணமாக குமரி மாவட்டம் வரலாறு காணாத அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. மாவட்டத்தின் மலையோர பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை நீடித்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அனைத்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டி அணைகளில் இருந்து 18 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி உள்ளன. மாவட்டம் முழுவதும் 14 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளன. இதேபோன்று தாமிரபரணி ஆறு, கோதையாறு பறளியாறு, பழையாறு உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பழையாற்றில் ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளத்தால் அக்கறை பகுதியில் 30 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது, தேரூர், மருங்கூர், அக்கறை உள்ளிட்ட பகுதிகளுக்கான பொதுபோக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!