குமரி அருகே வனவிலங்குகளை வேட்டையாடிய 3 பேர் கைது: வனத்துறையினர் அதிரடி

குமரி அருகே வனவிலங்குகளை வேட்டையாடிய 3 பேர் கைது: வனத்துறையினர் அதிரடி
X

பூதப்பாண்டி அருகே வெடி வைத்து வனவிலஙங்குகளை வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

குமரி வனப்பகுதியில் வெடி வைத்து வனவிலங்கு வேட்டையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி வனச்சரகம் தெற்குமலை மேற்கு பகுதியில் நாட்டு வெடி வைத்து மிளா மற்றும் காட்டு பன்றி ஆகிய வன விலங்குகளை வேட்டையாடுவதாக வனதுறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் வனச்சரக அலுவலர் திலீபன் உத்தரவின் பேரில் வனத்துறை ஊழியர்கள், வேட்டைதடுப்பு காவலர் அடங்கிய சிறப்பு குழு நேற்று இரவு 11 மணியளவில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது தோவாளை அருகில் உள்ள தனியார் கல்லூரி பின்புறம் நாட்டு வெடி வெடிக்கும் சத்தம் கேட்டது, வனவிலங்குகள் வேட்டையாடப்படுகின்றதா என்பது குறித்து அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்ட போது நான்கு நபர்கள் இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்தனர்.

அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்ததில் வனப்பகுதியில் நாட்டுவெடி வைத்து காட்டு பன்றியை வேட்டையாடியதும் தெரிய வந்தது, தடைசெய்யப்பட்ட காட்டு பன்றியினை வேட்டையாடிய குற்றத்திற்காக மூன்று நபர்கைது செய்யப்பட்டனர். மேலும் மற்றொருவர் பிடிக்க முற்படும் போது தப்பி ஓடிவிட்டார். தப்பி ஓடிய நபரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
Will AI Replace Web Developers