சரக்கு கப்பல் மோதி விசைப்படகு கவிழ்ந்து விபத்து: 17 மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதி

சரக்கு கப்பல் மோதி விசைப்படகு கவிழ்ந்து விபத்து: 17 மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதி
X
கடலில் பர்மா சரக்கு கப்பல் மோதி விசைப்படகு கவிழ்ந்த விபத்தில் 17 மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், கொட்டில்பாடு உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 15 மீனவர்கள் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த 2 மீனவர்கள் என மொத்தம் 17 மீனவர்கள் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ராஜாமணி என்பவருக்கு சொந்தமான சிஜூமோன் என்ற விசைப்படகில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 19 நாட்டின்கன் கடல் மைல் தூரத்தில் சென்றபோது சிங்கப்பூரில் இருந்து மும்பை நோக்கி வந்து கொண்டு இருந்த பர்மா நாட்டு சரக்கு கப்பல் மோதியதில் விசைப்படகு உடைந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் 2 மீனவர்கள் படுகாயமும் 15 மீனவர்கள் காயமும் அடைந்தனர், இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த கடலோர காவல் படையினர் சக மீனவர்கள் துணையுடன் மீனவர்கள் அனைவரையும் மீட்டனர்.

மேலும் அவர்களை கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடையே சரக்கு கப்பலில் வந்து விபத்தை ஏற்படுத்தியவர்கள் மீது கொலை முயற்சி பதிவு செய்ய வேண்டும். வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மீனவர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்குவதோடு கடலுக்கு செல்லும் மீனவர்களின் பாதுகாப்பை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என தெற்காசிய மீனவ தோழமை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா