குமரியில் 4 நாட்களில் 15.23 கோடி மது விற்பனை: டாஸ்மாக் அதிகாரி தகவல்

குமரியில் 4 நாட்களில் 15.23 கோடி மது விற்பனை: டாஸ்மாக் அதிகாரி தகவல்
X
தீபாவளியை முன்னிட்டு குமரியில் 4 நாட்களில் 15.23 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக டாஸ்மாக் அதிகாரி தகவல் தெரிவித்தார்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் பல மாதங்களாக பூட்டப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட டாஸ்மாக் மதுக்கடைகளில் கடந்த நான்கு நாட்களில் ரூபாய் 15.23 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளன. கடந்த 1ஆம் தேதியன்று ரூபாய் 3 கோடியே 5 லட்சத்து 99 ஆயிரத்து 860 க்கும், 2ஆம் தேதியன்று ரூபாய் 2 கோடியே 98 லட்சத்து 81 ஆயிரத்து 250 க்கும் மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான நவம்பர் 3ஆம் தேதி ரூபாய் 4 கோடியே 41 லட்சத்து 35 ஆயிரத்து 660 மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையன்று வியாழக்கிழமை ரூபாய் 4 கோடியே 77 லட்சத்து 52 ஆயிரத்து 880 க்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது.

கடந்த நான்கு நாட்களில் மொத்தம் ரூபாய் 15 கோடியே 23 லட்சத்து 69 ஆயிரத்து 650 க்கு மதுபானங்கள் விற்பனை ஆகியிருப்பதாக டாஸ்மாக் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!