குமரியில் வெடிமருந்து வெடித்து 10 வயது சிறுமி உடல் சிதறி பலி: தாயார் படுகாயம்

குமரியில் வெடிமருந்து வெடித்து 10 வயது சிறுமி உடல் சிதறி பலி: தாயார் படுகாயம்
X

வெடிமருந்து வெடித்ததில் சேதமடைந்த வீடு.

குமரியில் வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த நிலையில் வெடிமருந்து வெடித்ததில் 10 வயது சிறுமி உடல் சிதறி பலி.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ராஜாக்கமங்கலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஆறுதெங்கன் விளை பகுதியை சேர்ந்தவர் ராஜன் ( 40 ). இவரது மனைவி பார்வதி இவர்களுக்கு 8 ஆம் வகுப்பு படிக்கும் தேன்மொழி (13), மற்றும் 5 ஆம் வகுப்பு படிக்கும் வர்ஷா (10) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.

இவர்கள் ஆலங்கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் முறையே எட்டாம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பு வடித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜன் அனுமதியின்றி தனது வீட்டில் பட்டாசு தயாரித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் வீட்டில் பட்டாசு தயாரிக்க வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து இன்று அதிகாலை திடீரென வெடித்தது.

இதில் வர்ஷா உடல் சிதறி பலியானார், மேலும் ராஜனின் வீடும் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த கல் விழுந்ததில் பார்வதியும் பலத்த காயம் அடைந்தார். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் ராஜாக்கமங்கலம் போலீசார் வெடி விபத்து நடந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இவர்களுக்கு பட்டாசு தயாரிக்கும் வெடிமருந்து எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக ராஜனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயம் அடைந்த பார்வதி நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்