/* */

குமரி காவல்துறை நடத்திய கஞ்சா வேட்டையில் 6 நாட்களில் 51 பேர் கைது செய்யப்பட்டனர்.

குமரி காவல்துறை நடத்திய கஞ்சா வேட்டையில் 6 நாட்களில் 51 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

குமரி காவல்துறை நடத்திய கஞ்சா வேட்டையில் 6 நாட்களில் 51 பேர்  கைது செய்யப்பட்டனர்.
X

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் போதை பொருள் விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து போதை பொருள் விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டதோடு அனைத்து காவல் நிலைய அதிகாரிகளுக்கும் கஞ்சாவிற்கு எதிரான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதனிடையே கஞ்சா விற்பனை தொடர்பான பிரச்னையில் கன்னியாகுமரியில் இரட்டை கொலை நடைபெற்ற நிலையில் போலீசாரின் கஞ்சா வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக இன்று 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 5 நாளில் கஞ்சாவிற்கு எதிராக போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 51 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் இதுவரை 16.250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

Updated On: 30 Jun 2021 12:45 PM GMT

Related News