திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா இன்று துவக்கம்

திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா   இன்று துவக்கம்
X

திருச்செந்தூர் முருகன் கோவில் (கோப்பு படம்)

கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வருகிற 18ம் தேதி நடைபெறவுள்ளது.

கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாளையும் விரத நாட்களாக கருதுகின்றனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஒவ்வொரு வருடமும் கந்த சஷ்டி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய பல்வேறு ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று யாக சாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா தொடங்குகிறது. இந்த விழாவின்போது யாக சாலையில் இருந்து ஜெயந்திநாதர் எழுந்தருளுதல், வேல்வகுப்பு, வீரவாள்வகுப்பு முதலிய பாடல்களுடன், மேள வாத்தியங்கள் முழங்க சண்முகவிலாசம் சேர்தல், சுவாமிக்கு தீபாராதனை ஆகியவை நடைபெற உள்ளன.

கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வருகிற 18ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விழாவில் பங்கேற்க வரும் பக்தர்களின் வசதிக்காக தற்காலிக குடில்கள், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. பல்வேறு ஊர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா