ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்தை திமுக கைப்பற்றியது

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பைல் படம்
ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் 16 வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவிகள் உள்ளது. இதில் திமுக 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் ஒரு இடத்திலும் சுயேச்சை வேட்பாளர்கள் இரண்டு இடத்திலும் அதிமுக வேட்பாளர்கள் நான்கு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
திமுகவிற்கு தேவையான தனி பெரும்பான்மை கிடைக்க, சுயேட்சை வேட்பாளர்களை வளைத்துப் போட்டு விடும் என நம்பப்படுகிறது அவ்வாறு நடந்தால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம் திமுக வசமாகிறது
1வது வார்டு ஹேமாவதி, எட்டாவது வார்டு கருணாநிதி, ஒன்பதாவது வார்டு உஷா, 10வது வார்டு ஆன்டனி வினோத்குமார், 13வது வார்டு மல்லிகா, 14வது வார்டு மாலதி, 15-ஆவது வார்டு கோமதி, 16வது வார்டு பரமசிவன் ஆகிய திமுகவினர் எட்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்
அதுபோல திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக 11 வது வார்டில் களமிறங்கிய வாணிஸ்ரீ வெற்றி பெற்றார். இரண்டாவது வார்டில் சுயேச்சை வேட்பாளர் தியாகராஜ், 7வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் எல்லம்மாள் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
3வது வார்டு வேட்பாளர் சாந்தகுமாரி, 5-ஆவது வார்டு வேட்பாளர் செந்தில் ராஜன், ஆறாவது வார்டு வேட்பாளர் இஷாந்த், 12வது வார்டு வேட்பாளர் யுவராணி ஆகிய 4 பேரும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர் நான்காவது வார்டுக்கு அதிகாலை 4 மணி வரை முடிவு அறிவிக்கப்படவில்லை
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu