குன்றத்தூர் ஒன்றிய சேர்மேனாக சரஸ்வதி மனோகரன் போட்டியின்றி தேர்வு

குன்றத்தூர் ஒன்றிய சேர்மேனாக சரஸ்வதி மனோகரன் போட்டியின்றி தேர்வு
X

குன்றத்தூர் ஒன்றிய சேரமேனாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட திமுக கவுன்சிலர் சரஸ்வதி மனோகரன்.

குன்றத்தூர் ஒன்றிய சேர்மேனாக சரஸ்வதி மனோகரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் இருபத்தொரு ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் உள்ளது இதற்காக நடந்த தேர்தலில் திமுக 18 இடங்களிலும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் ஒரு இடத்திலும் அதிமுக இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றது.

வெற்றிபெற்ற 21 ஒன்றிய கவுன்சிலர்களும் கடந்த 20ஆம் தேதி நடந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு பதவி ஏற்றுக் கொண்டனர். ஒன்றிய சேர்மன் தேர்தல் இன்று காலை குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இதில் ஒன்றிய சேர்மனாக திமுகவைச் சேர்ந்த சரஸ்வதி மனோகரன் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து வேறு யாரும் போட்டியிடவில்லை இதனைத் தொடர்ந்து ஒன்றிய சேர்மனாக திமுகவைச் சேர்ந்த சரஸ்வதி மனோகரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!