டாஸ்மாக் மூடல்: கள்ளசந்தையில் விற்க முயன்ற மதுபானம் பறிமுதல்
பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்கள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அரசு மதுபானங்களை கள்ள சந்தையிலும் இதேபோல் கள்ள சாராயத்தை கிராமங்களிலும் விற்பனை செய்து வருவதாக தொடர் புகார்கள் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்தது.
அதன் பேரில் காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் கள்ளத்தனமாக மது பானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காஞ்சி மாவட்ட காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் நேற்று காந்தி ஜெயந்தி என்பதால் அரசு மதுபான கடை விடுமுறை என்பதை அறிந்து மதுபானம் விற்பனை செய்வது வருபவர்களை கண்காணித்து அவர்கள் விற்பனை செய்யும் நேரத்தில் கையும் களவுமாக இருபத்தி ஏழு நபர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 24 ஆயிரம் மதிப்புள்ள 198 மதுபான பாட்டில்கள் இதேபோல் கிராமங்களில் விற்பனை செய்ய வைத்திருந்த 15 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
தேர்தலை பயன்படுத்தி கிராமங்களில் வாக்காளர்களுக்கு மதுபானங்களை கொடுக்க மதுபான கடைகளில் மொத்தமாக கொள்முதல் செய்ய வருவோரையும் காவல்துறை கண்காணித்து வருவதாகவும் , இதுபோன்ற செயல்கள் யாரும் ஈடுபட வேண்டாம் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் கேட்டு கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu