ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு பரிசீலனை நிறைவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மனு தாக்கல் செய்த 8603 பேரின் மனுக்கள் பரிசீலனை மாலை 5மணியுடன் நிறைவு பெற்றது

தமிழகத்தில் விடுபட்டு 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 என இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு கடந்த 15ஆம் தேதி தொடங்கி நேற்று நிறைவு பெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 ஒன்றியங்களில் கடந்த 7 நாட்களாக அதிமுக திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 2603 நபர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் இன்று ஒன்றிய அலுவலகங்களில் வேட்பாளர்கள் முன்னிலையில் பரிசீலனை செய்யப்பட்டது. காலை 11 மணிக்கு துவங்கிய வேட்புமனு பரிசீலனை மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

வேட்புமனு பரிசீலனை தொடர்ந்து அனைத்து ஒன்றிய அலுவலகங்களிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

மாலை 5மணியளவில் அனைத்துக் வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு நிறைவு பெற்றதாக தேர்தல் அலுவலர்கள் அறிவித்தனர். நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு அதன்பின் விவரங்கள் வெளியிடப்படும் என தேர்தல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Tags

Next Story
ai in future agriculture