காஞ்சிபுரம் : 20வது மெகா தடுப்பூசி முகாம் 395 இடங்களில் நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் : 20வது மெகா தடுப்பூசி முகாம் 395 இடங்களில் நடைபெறுகிறது.
X

காட்சி படம் 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை 395 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது

கொரோனா மற்றும் அதைச் சார்ந்த ஓமிக்ரான் நோயைத் தடுப்பதற்காக 15 வயதிலிருந்து 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன்படி நாளை 20வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முன் கள சுகாதார பணியாளர்கள் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் என மொத்தம் 8,739 பேர் உள்ளனர். இதுவரை 3,431 பேர் மட்டுமே (36%) தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் 18 வயதிலிருந்து 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதில் முதன்மை இடத்தை வகித்தாலும் இரண்டாவது தவணை தடுப்பூசியில் குறைந்த அளவு (81%) இலக்கையே எட்டியுள்ளது.

கோவேக்சின் இரண்டாவது தவணை தடுப்பூசி போடுவதற்கான இடைவெளி 28 நாட்கள் , கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டாவது தவணை தடுப்பூசி போடுவதற்கான இடைவெளி 84 நாட்கள் இதுவரை 1,97,789 நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாத நிலையில் உள்ளனர்.

இரண்டு தவணை தடுப்பூசி போடப்பட்டிருந்தால் மட்டுமே கொரோனா மற்றும் புதிய வகை ஒமிக்ரான் பாதிப்பிலிருந்து தற்காத்து கொள்ள முடியும் என இந்திய மருத்துவக்கழகம் அறிவித்துள்ளது.

எனவே நாளை நடைபெற உள்ள 20 ஆவது மெகா தடுப்பூசி முகாமில் அனைவரும் பயன்பெற உன் இதற்காக 395 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil