காஞ்சிபுரம் : மாநகராட்சியின் முதல் பெண் மேயர் ?

காஞ்சிபுரம் : மாநகராட்சியின் முதல் பெண் மேயர் ?
X

காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலெக்டர், போலீஸ் டிஐஜி ஆகியோர் பெண்கள், இனி நடக்க உள்ள தேர்தலில் மேயராக ஒரு பெண் தேர்வு செய்யப்பட உள்ளார்.

தமிழகம் முழுவதும் விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முதல்கட்ட பணிகளை தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணைய அறிவுரைப்படி மாவட்ட நிர்வாகங்களால் மேற்கொண்டு வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஆகியன இறுதி வாக்காளர் பட்டியல், மற்றும் வார்டு மறு சீரமைப்பு வரையறை என அனைத்தும் நிறைவு பெற்றுள்ளது.

இன்னும் சில வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஆகிய தலைமை பதவிகளுக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பு உத்தரவு இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அவ்வகையில்

தாம்பரம் மற்றும் சென்னை மாநகராட்சி - SC பெண்கள்

ஆவடி மாநகராட்சி - ST ( பொது பிரிவினருக்கும் )

கடலூர் , திண்டுக்கல், வேலூர், கரூர் சிவகாசி , காஞ்சிபுரம் , மதுரை, கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய மேயர் பதிவுகளுக்கு - பெண்கள் பொது பிரிவினருக்கு ஓதுக்கபட்டுள்ளது‌.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆட்சியர் , டிஐஜி உள்ளிட்ட பல அரசு பதவிகளில் பெண்கள் அதிகளவில் உள்ள நிலையில் தற்போது மாநகராட்சி முதல் மேயராக பெண் வரவுள்ளது குறிப்பிடதக்கது.

Tags

Next Story