Kanchipuram News காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்

Kanchipuram News காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்
X

கூடுதல் நூலக கட்டடத்திற்கு அடிக்கல் நாடும் எம்எல்ஏ

நூலக கட்டடதிற்கு அடிக்கல் நாட்டிய எம்.எல்,ஏ. எழிலரசன், காஞ்சிபுரத்தில் பெய்த மழைஅளவு, 18 இடங்களில், தானியங்கி மழைமானி பொருத்தப்படவுள்ளது

நூலக கூடுதல் கட்டடம்

சின்ன காஞ்சிபுரம் பகுதியில் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் அண்ணா கிளை நூலகம் உள்ளது. இந்த நூலகத்தின் முதல் மாடியில் ரூ.50 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்ட காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் செங்கல்லை எடுத்துக் கொடுத்து அடிக்கல் நாட்டினார் .

நிகழ்வில் காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாநகராட்சி மண்டலக் குழு தலைவா்கள் கே.சந்துரு, மோகன், திமுக காஞ்சிபுரம் மாநகர செயலா் சிகேவி தமிழ்ச்செல்வன் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.

இதையடுத்து காஞ்சிபுரம் நகா் செலிவிமேடு பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்கப் பள்ளி வளாகத்தில் ரூ.13.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடத்தையும், பள்ளியில் புதிதாக ரூ.2 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறையையும் எம்எல்ஏ திறந்து வைத்தார்

தானியங்கி மழைமானி

காஞ்சிபுரம் மாவட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், 18 இடங்களில், தானியங்கி மழைமானி அமைக்கப்பட உள்ளது. இதனால், ஒரு மணி நேர இடைவெளியில் மழை அளவு தெரிந்து கொள்வதோடு, விவசாயிகளுக்கும் இது பயனளிக்கும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் ஐந்து தாலுகா அலுவலகங்களிலும், செம்பரம்பாக்கம் ஏரி அமைந்துள்ள இடத்திலும் என, ஆறு இடங்களில் மழையை கணக்கிடும் மழைமானி செயல்படுகிறது.

இந்த மழைமானியில் பதிவாகும் மழையளவை, வருவாய் துறை ஊழியர்கள் கணக்கிட்டு சொல்கின்றனர். இந்நிலையில், தானியங்கி மழைமானி அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காஞ்சிபுரத்தில் பெய்த மழை அளவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நிலவரப்படி (மழையளவு மி.மீ.) காஞ்சிபுரத்தில் 5.80, உத்தரமேரூரில் 12.10, வாலாஜாபாத் 3, ஸ்ரீபெரும்புதூா் 8.40, குன்றத்தூா் 17.20, செம்பரம்பாக்கம் 8.20 மி.மீ. சராசரி 9.122 மி.மீ.

காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை மிதமான மழையே பெய்திருந்தாலும் இரு ஓட்டு வீடுகள் பலத்த காற்றால் சேதமடைந்துள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் ஒன்றியத்துக்குட்பட்ட பென்னலூரில் செல்லம்மாள் என்பவரின் வீடும், வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட காலூரில் சாவித்திரி என்பவரின் வீடும் சேதமடைந்தது.

காஞ்சிபுரம் நகரில் அண்ணா நகா், எம்.ஜி.ஆா். நகா், காமராஜ் நகா், காசிம் நகா், பாரதி நகா், அன்னை சத்யா நகா், சதாசிவம் நகா், காமாட்சியம்மன் காலனி உள்ளிட்ட பகுதிகள் மழையால் அதிகமாக பாதிப்புக்குள்ளாகும் எனக் கண்டறியப்பட்டு மாவட்ட நிர்வாகத்தால் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


செய்யாற்றில் நேரடியாக விடப்படும் அனுமந்தண்டலம் அணைக்கட்டு நீர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், இரண்டாவது பெரிய ஏரியான உத்திரமேரூர் ஏரிக்கு, முக்கிய நீர் வரத்து ஆதாரமாக அனுமந்தண்டலம் செய்யாற்று அணைக்கட்டு உள்ளது.

செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, அனுமந்தண்டலம் அணைக்கட்டு நிரம்பி, அங்கிருந்து வரத்து கால்வாய் வாயிலாக உத்திரமேரூர் ஏரிக்கு தண்ணீர் சென்றடைவது வழக்கம்

இந்த ஆண்டு வடகிழக்குபருவமழை துவங்குவதற்கு முன்பாகவே, தென்மேற்கு பருவமழை வாயிலாக செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, அனுமந்தண்டலம் செய்யாற்று அணைக்கட்டு வாயிலாக உத்திரமேரூர் ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் சென்றது.

இதனால், கடந்த மாதமே உத்திரமேரூர் ஏரி நிரம்பியது. தற்போது, கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து ஏரியின் மூன்று கலங்கல்கள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

இதனால், அனுமந்தண்டலம் செய்யாற்று அணைக்கட்டு பகுதியில் இருந்து, ஏரிக்கு வரும் நீர்வரத்தை நீர்வளத் துறையினர் தடை செய்து, நேரடியாக ஆற்றில் விடும் நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture