காஞ்சிபுரத்தில் திமுக, அதிமுக சார்பில் போட்டியிட்ட மூன்று தம்பதிகள் வெற்றி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுக அதிமுக சார்பில் போட்டியிட்ட மூன்று கணவன், மனைவிகள் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் மனோகரனும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அவரது மனைவி சரஸ்வதி மனோகரனும் போட்டியிட்டனர். இவர்கள் இருவரும் தேர்தலில் வெற்றியும் பெற்றனர்.

குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொளப்பாக்கம் ஊராட்சியில் அதிமுகவைச் சேர்ந்த மாலதி இயேசுபாதம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அவரது கணவர் இயேசு பாதமும் போட்டியிட்டனர் போட்டியிட்ட இருவரும் தேர்தலில் வெற்றி பெற்றனர்.

அதுபோல ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு திமுகவைச்சேர்ந்த தமிழ் அமுதன் போட்டியிட்டார். 12வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு அவரது மனைவி மலர்விழி தமிழ் அமுதனும் போட்டியிட்டார். போட்டியிட்ட இருவரும் வெற்றியும் பெற்றனர். குன்றத்தூர் ஒன்றிய திமுக சார்பில் இரண்டு தம்பதியினரும், அதிமுக சார்பில் போட்டியிட்ட ஒரு தம்பதியினரும் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!