உத்திரமேரூர் ஒன்றிய சேர்மேனாக ஹேமலதா ஞானசேகரன் போட்டியின்றி தேர்வு

உத்திரமேரூர் ஒன்றிய சேர்மேனாக ஹேமலதா ஞானசேகரன் போட்டியின்றி தேர்வு
X

உத்திரமேரூர் ஒன்றிய சேர்மேனாக தேர்வு செய்யப்பட்ட ஹேமலதா ஞானசேகரன்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றிய சேர்மன் தேர்தலில் திமுகவை சேர்ந்த ஹேமலதா ஞானசேகரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 22 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 1வது வார்டு ருத்ர கோட்டி, இரண்டாவது வார்டு திருமலை, 3வது வார்டு அண்ணாதுரை, ஆறாவது வார்டு வீரம்மாள், ஏழாவது வார்டு சுகுணா, ஒன்பதாவது வார்டு ஹேமலதா, 10-ஆவது வார்டு கலைச்செல்வி, 11வது வார்டு பானுமதி, 12வது வார்டு ஞானசேகரன், 13வது வார்டு அன்புராஜ், 15வது வார்டு பவுன், 16வது வார்டு துரை வேலு,

17வது வார்டு சுப்பிரமணி, 18-வது வார்டு சந்திரா, 19வது வார்டு கல்யாணசுந்தரம் 20 ஆவது வார்டு நதியா, 21வது வார்டு வசந்தி, 22வது வார்டு சேகர் ஆகிய திமுகவைச் சேர்ந்த 18 பேர் வெற்றி பெற்ற வெற்றி பெற்றனர். இவர்களும்

திமுக கூட்டணியில் 14 வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தீபா வெற்றி பெற்றார். அதிமுக போட்டியிட்ட 22 இடங்களில் 4வது வார்டு ராமச்சந்திரன், 5-ஆவது வார்டு ரேவதி 8வது வார்டு மகேஸ்வரி ஆகிய மூன்று பேர் மட்டுமே வெற்றி பெற்றனர் இவர்கள் அனைவரும் கடந்த 20 தேதி பதவி ஏற்றுக் கொண்டனர்.

உத்திரமேரூர் ஒன்றிய குழு தலைவருக்கான தேர்தல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஒன்பதாவது வார்டு கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட ஹேமலதா ஞானசேதரன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து வேறு யாரும் போட்டியிடாததால் இவர் ஒருமனதாக போட்டியின்றி சேர்மேனாக தேர்வு செய்யப்பட்டார்.

Tags

Next Story
ai applications in future