பழங்குடியின மாணவர்களுக்கு பி.எட். மற்றும் டெட் தேர்விற்கு பயிற்சி கட்டணம் இலவசம்

காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி
மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்த்தி வெளியிட்ட செய்தி குறிப்பில் ,
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வி பயிலும் 100 பழங்குடியின மாணவ/மாணவியர்களின் கல்வியியல் பட்டப்படிப்பு பயில்வதற்கு ஆகும் கல்விக் கட்டணம், புத்தக கட்டணம், விடுதிக் கட்டணம், சீருடைக் கட்டணம், இதரச் செலவினங்கள் மற்றும் தமிழ்நாடுஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) வெற்றி பெற தனியார் பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயில்வதற்கு ஏற்படும் செலவினங்கள் முழுவதையும் அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, 2020-2021 ஆம் ஆண்டிற்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதால் மாணவர்/மாணவியர்களின் தொகுப்பு மதிப்பெண் பட்டியலின் (Consolidated Mark Statement) அடிப்படையில் அரசு பள்ளிகள் /அரசு உதவிபெறும் பள்ளிகள் / ஆதிதிராவிடர் நல பள்ளிகள் / பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளிகளில் பயின்ற விருப்பமுள்ள பழங்குடியினர் மாணவர்களிடமிருந்து மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்றிதழ் மற்றும் விருப்ப கடிதம் ஆகியவற்றினை 06.08.2021க்குள் காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu