அண்ணாவை மறந்த வெற்றி பெற்ற திராவிட கட்சி வேட்பாளர்கள்
காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள திருவுருவ சிலை
காஞ்சிபுரம் என்றாலே கோயில் நகரம் பட்டு நகரம் என பல புகழ் பெற்றிருந்தாலும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த ஊர் என்பதை யாரும் மறக்க இயலாது. குறிப்பாக திராவிட கட்சிகள் எனக் கூறிக் கொள்ளும் திமுக, அதிமுகவினர் ஒருபோதும் மறக்கக்கூடாது. அண்ணாவின் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற சொல் மிகவும் புகழ் பெற்றது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. ஒரு மாநகராட்சி, இரண்டு நகராட்சிகள், 3 பேரூராட்சிகளுக்கு நடைபெற்றது. இதில் அதிக அளவில் திமுகவினரும், அதிமுகவினரும் வெற்றி பெற்றுள்ளனர்.
பொதுவாகவே அண்ணாவின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் காஞ்சிபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். இதேபோல் சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் திராவிடக் கட்சிகள் அவரது இல்லத்திற்கு சென்று மலர் மாலை அணிவிப்பது வழக்கம்.
ஆனால், தற்போது நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் ஒரு சில எண்ணிக்கையிலான வேட்பாளர்களே அவரது நினைவு இல்லத்திற்கு சென்று இதுவரை மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர்.
திராவிட கட்சிகள் பிரச்சாரத்தின் போது அண்ணாவின் ஊரில் தோல்வி ஏற்பட்டால் அது அண்ணாவிற்கு இழுக்கு. ஆகவே வெற்றியை காணிக்கையாக அண்ணாவிற்கு செலுத்தவேண்டும் என கூறிய நிலையில் வெற்றி பெற்ற பின் அண்ணா இல்லத்திற்கு சென்று மரியாதை செய்ய மறந்தது ஏனோ?
இச்செயல் தொண்டர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu