உள்ளாட்சித் தேர்தல் : காஞ்சிபுரம் வாக்குச்சாவடிகள் வரைவு பட்டியல் வெளியீடு
உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியலை கலெக்டர் ஆர்த்தி வெளியிட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி பெற்றுக்கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக, இம்மாவட்டத்தில் உள்ள 5 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த கிராம ஊராட்சி வார்டு வாரியாக அமைக்கப்பட இருக்கும் 1292 வாக்குச்சாவடிகளின் வரைவுப் பட்டியலினை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி இன்று அலுவலக வளாகத்தில் வெளியிட மாவட்ட ஊரக முகமை வளர்ச்சி திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி பெற்று கொண்டார்.
பொதுமக்களின் தகவலுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (வளர்ச்சிப் பிரிவு), மாவட்ட ஊராட்சி அலுவலகம், அனைத்து ஊராட்சி ஒன்றிய மற்றும் கிராம ஊராட்சி அலுவலகங்களிலும் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இப்பட்டியலின் மீது ஆட்சேபணைகள் மற்றும் கருத்துருக்கள் ஏதேனும் இருப்பின் 09.08.2021க்குள் அதன் விவரத்தினை அந்தந்த உள்ளாட்சி அமைப்புக்கான அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்களான வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி)களிடம் எழுத்துப்பூர்வமாகவும், மேலும் 07.08.2021 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகளுக்கான நடைபெறும் கூட்டத்திலும் கருத்துக்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி அறிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu