ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய சேர்மன் பதவியை குலுக்கல் முறையில் கைப்பற்றிய திமுக

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய சேர்மன் பதவியை குலுக்கல் முறையில் கைப்பற்றிய திமுக
X

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றி சேர்மேனாக குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட திமுக சேர்மன் கருணாநிதி.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய சேர்மன் பதவியை திமுக குலுக்கல் முறையில் கைப்பற்றியது.

ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் 16 வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவிகள் உள்ளது. இதில் திமுக 8 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் ஒரு இடத்திலும் சுயேச்சை வேட்பாளர்கள் இரண்டு இடத்திலும் அதிமுக வேட்பாளர்கள் நான்கு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

திமுகவிற்கு தேவையான தனி பெரும்பான்மை கிடைக்க சுயேட்சை வேட்பாளர்களை வளைத்துப் போட்டு விடும் என நம்பப்பட்டது அவ்வாறு நடந்தால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம் திமுக வசமாகும் என கூறப்பட்டது.

இன்று நடந்த சேர்மன் தேர்தலில் திமுக சார்பாக 8வது வார்டு கவுன்சிலரான கருணாநிதி சேர்மேன் தேர்தலில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து 7 வது வார்டில் சயேட்சையாக வெற்றிப் பெற்ற எல்லம்மாள் போட்டியிட்டார்.

இவரும் தலா 8 வாக்குகளைப் பெற்றனர். சம நிலையில் இருந்ததால், ஒன்றிய சேர்மேனை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி இவருவர் பெயரையும், தனித் தனியாக துண்டு சீட்டில் எழுதப்பட்டது. குலுக்கி போடப்பட்டது.

அதில் திமுக சேர்மன் வேட்பாளர் கருணாநிதியின் பெயர் கொண்ட துண்டு சீட்டு எடுக்கப்பட்டது. இதனால் குலுக்கல் முறையில் திமுக ஒன்றிய கவுன்சிலர் கருணாநிதி ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய சேர்மேனாக தேர்வு செய்யப்பட்டார்..

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!