ஏடிஎம்மில் கள்ள நோட்டு டெபாசிட் செய்த வழக்கில் மூவர் கைது

ஏடிஎம்மில் கள்ள நோட்டு டெபாசிட் செய்த வழக்கில் மூவர் கைது
X

சென்னை, நந்தம்பாக்கம், மவுண்ட் பூந்தமல்லி சாலையில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்., ஒன்றில் பணம் செலுத்தும் தானியங்கி கருவியில் கடந்த, 11ம் தேதி, 500 ரூபாய் கள்ள நோட்டுக்கள், 28 செலுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக வங்கி மேலாளர் லதா என்பவர் கொடுத்த புகாரின் படி, போலீசார் விசாரணை நடத்தினர். பரங்கிமலையை சேர்ந்த பெண் ஒருவர் ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் செலுத்தியது தெரியவந்தது. அவரிடம் விசாரித்தபோது, ஏ.டி.எம்., மையத்திற்கு வந்த ஒருவர் தான் வங்கி அட்டை கொண்டு வரவில்லை. அதனால், தனது பணம், 14 ஆயிரம் ரூபாயை வங்கியில் எனது கணக்கில் செலுத்தி, அந்த தொகையை,'கூகுள் பே' வாயிலாக அனுப்பும் படி கூறினார். அதன்படி அவர் கொடுத்த பணம் செலுத்தி பின், கணக்கில் காண்பிக்காததால், அவருக்கு பணம் அனுப்பவில்லை என கூறினார். இதையடுத்து, நடந்த விசாரணையில், பெண்ணிடம் கள்ள நோட்டை கொடுத்த அம்பத்தூரை சேர்ந்த அமர்நாத்(31), என்பவர் சிக்கினார். அவர் கொடுத்த தகவலின்படி, ஆலந்தூரை சேர்ந்த மெகதாப் அலி(52), என்பவர் கொடுத்த கள்ள நோட்டு என தெரிவித்தார். மேலும், இதில் புதுப்பேட்டையை சேர்ந்த நஜிமுதீன்(39), என்பவரும் சம்பந்தப்பட்டது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து, 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்தனர். பின், மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இந்த கள்ள நோட்டு விவகாரம் தொடர்பாக முக்கிய புள்ளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business