பாலியல் தொல்லை: அதிகாரியை கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பாலியல் தொல்லை:  அதிகாரியை கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X
பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி, அதிகாரியை கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் அதிகாரியை கண்டித்து ஊழியர்கள் கிண்டி கோட்ட உதவி கணக்கு அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிண்டி வருவாய் பிரிவில் உதவி கணக்கு அலுவலராக மாரிமுத்து செயல்பட்டு வருகிறார். நுகர்வோரை அலைகழித்து லஞ்சம் வாங்குவதாகவும், பகுதி நேரமாக பணியாற்றும் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி ஊழியர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் தெற்கு கிளை-1 தலைவர் கே.தரணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டலச் செயலாளர் முருகானந்தம், நிர்வாகிகள் ஆதன் இளங்கீரன், விஜயபாஸ்கர், குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு போராடினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததின் பேரில் அனைவரும போராட்டத்தை கைவிட்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!