பாதாள சாக்கடை குழாய் உடைப்பு: குடியிருப்புகளில் கழிவுநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
நங்கநல்லுார், நுாறு அடி சாலை ஒட்டிய 46வது தெருவில் திடீர் பள்ளம் ஏற்பட்டது.
நங்கநல்லுார், 100 அடி சாலையில் பாதாள சாக்கடை பிரதான குழாய் உடைப்பு காரணமாக, பல்வேறு நகர்களின் நுாற்றுகணக்கான குடியிருப்புகளில் கழிவறை தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
சென்னை மாநகராட்சியின் ஆலந்துார் மண்டலம், நங்கநல்லுார், 100 அடி சாலையில் நேற்று முன்தினம் பாதாள சாக்கடை பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டது.
இதன்காரணமாக, ஸ்டேப் பாங்க் காலனி, ஏ.ஜி.எஸ்., காலனி, அய்யப்பாநகர், வோல்டாஸ் காலனி, சர்வமங்களா நகர், லட்சுமிநகர், நான்காவது நிலை, கண்ணன்நகர், எம்.எம்.டி., காலனி, ஸ்ரீவித்யா நகர், ஹிந்து காலனி உள்ளிட்ட பகுதிகளின் குடியிருப்பு கழிவறை வழியாக கழிவுநீர் வீட்டிற்குள் புகுந்தது. தொடர் மழை தவித்து வந்த மக்கள் கழிவுநீர் புகுந்ததால் மேலும், பாதிக்கப்பட்டனர். தகவல் அறிந்து குடிநீர் வாரிய, மாநகராட்சி அதிகாரிகள் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்தனர்.
திடீர் பள்ளம்: தொடர் மழை காரணமாக நங்கநல்லுார், 100 அடி சாலையில் இரண்டு அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியிருந்தது. ஆலந்துார், பெருங்குடி மண்டம் இணையும் பகுதியான அங்கு மழைநீர் வடிகாலில் பிரச்னை உள்ளதால், 100 அடி சாலையில் மழைநீர் தேங்குவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நுாறு அடி சாலை ஒட்டிய 46வது தெருவில் ஒன்றரை மீட்டர் வட்டத்திற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனால், அச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu