கடையின் பூட்டை உடைத்து, சிகரெட், பணம் திருடிச்சென்ற நபர்களை தேடும் போலீஸார்

கடையின் பூட்டை உடைத்து, சிகரெட், பணம் திருடிச்சென்ற  நபர்களை தேடும் போலீஸார்
X

சென்னையில் கடையில் திருடும் நபர்களின் சிசிடிவி காட்சி

சென்னை, உள்ளகரம், பெரியார் தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் வாணுவம்பேட்டையில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்

பூட்டை உடைத்து, சிகரெட், பணம் திருடிச்சென்ற திருடர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

சென்னை, உள்ளகரம், பெரியார் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(48),இவர், வாணுவம்பேட்டையில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இன்று காலை, வழக்கம்போல் கடையை திறக்க வரும்போது, கடையின் முன்பக்க ஷட்டர் உடைக்கப்பட்டு, கதவுகள் திறக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாவில் இருந்த ரூ. 30 ஆயிரம் மற்றும் சிகரெட் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் ராமகிருஷ்ணன் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, கடையின் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது, 2 வாலிபர்கள் திருடிச் செல்வது தெரிய வந்தது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!