காங்கிரஸ் கட்சியின் சார்பில் மக்கள் விழிப்புணர்வு நடைபயணம்

காங்கிரஸ் கட்சியின் சார்பில் மக்கள் விழிப்புணர்வு நடைபயணம்
X

சென்னையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடந்த மக்கள் விழிப்புணர்வு நடைபயணம் 

சென்னையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மக்கள் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. இதில் திராளானோர் கலந்து கொண்டனர்.

சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தில் தென் சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய பொருளாதாரம் அழிக்கப்பட்டு விலைவாசி உயர்வை எடுத்து கூறும் வகையில் மக்கள் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஆதம்பாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது:-
மோடியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதில் தமிழகம் தெளிவாக இருக்கிறது. மோசமானவர்களுடன் சேர்ந்தால் என்ன கிடைக்கும் என்பதற்கு அதிமுகவிற்கு கிடைத்த பாடம்.
திமுகவுடன் கூட்டணி சேர்ந்து உள்ளோம். நாட்டின் முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கிறார். முதலமைச்சர்களிலேயே சிறந்த முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கிறார். ஒரு நாள் கூட ஒய்வு எடுக்காமல் தமிழகத்தை சுற்றி வருகிறார். இந்தியாவில் நல்ல முதலமைச்சராக உள்ளார். அதிமுக, பா.ஜ.க. குறை சொல்கின்றனர்.
முதலமைச்சர் ஸ்டாலினை குறை கூறுகின்றவர்கள் எதற்கு சமம் என்றால் சூரியனை பார்த்து குரைப்பது எது. மனிதன் கூட குரைப்பான் சில நேரங்களில்.
காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி பேசுகையில் விவசாய சட்டங்களை மோடி திரும்ப பெற்றுக் கொண்டார் என்றால் இடைத்தேர்தலில் தோற்றதினாலேயே திரும்ப பெற்றுக் கொண்டார். பெட்ரோல் 10 ரூபாய் குறைத்தார். உத்திர பிரதேசத்திலும் தோற்று போனால் பெட்ரோலுக்கு 50 ருபாய் கிடைக்கும் அந்த அளவிற்கு குறைத்து விடுவார் அது தான் உணமை. 5 மாநில தேர்தல் வரவிருப்பதனால் இதனை வாபஸ் பெறுவதால் சந்தர்பவாதம் என்கிறோம் என்றார். இதையெல்லாம் மக்களிடையே எடுத்து சொல்லவே இந்த நடைபயணம் என்றார்.

Tags

Next Story
the future with ai