ஆலந்தூர் மெட்ரோ அருகே மாநகர பேருந்து மோதி விபத்து:2 பேர் படுகாயம் வாகனசேதம்

சென்னை ஆலந்துார் அருகே டவுன்பஸ் மோதி சேதமடைந்து சாய்ந்த ஊர்பெயர்ப்பலகை.
ஆலந்தூர் மெட்ரோ அருகே வழிகாட்டி பெயர் பலகை மீது மாநகர பேருந்து மோதி விபத்தில், பெயர் பலகை அடியோடு விழுந்ததில் இருவர் காயமடைந்தனர்.. வாகனங்கள் சேதமடைந்தது..
சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஊரின் பெயர் எழுதப்பட்ட வழிகாட்டி பெயர் பலகை உள்ளது. இராட்சத அளவில் இருக்கும் பெயர் பலகையின் மீது தடம் எண் 70V கோயம்பேடு வரை செல்லும் பேருந்து மோதியதில் பெயர் பலகை அடியோடு சரிந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் படுகாயத்தோடு அந்த பெயர் பலகையிலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.அதே போல் டாடா ஏஸ் வாகன ஓட்டுனருக்கு லேசான காயம், இரண்டு இருசக்கர வாகனம் மற்றும் டாடா ஏஸ் வாகனம் சேதமாயின.பேருந்து டிரைவரின் கவனக்குறைவினால் விபத்து ஏற்பட்டிருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். பேருந்து முகப்பு பகுதி முற்றிலும் சேதமான நிலையில் பயணிகள் யாருக்கும் காயமில்லை.
விபத்தை எற்படுத்திய பேருந்து டிரைவர் ரகுநாத் மற்றும் கண்டக்டர் சின்னையா தப்பியோடி விட்டனர்.பலத்த காயமடைந்த சண்முகபாண்டியன் என்பவர் ராயபேட்டை மருத்துவமனைக்குசிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றொருவர் சத்யநாராயணனுக்கு லேசான காயத்துடன் சிகிச்சையில் உள்ளார்.சம்பவம் தொடர்பாக பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu