நள்ளிரவில் களைகட்டும் மது விற்பனை: நடவடிக்கை பாயுமா ?

நள்ளிரவில் களைகட்டும் மது விற்பனை: நடவடிக்கை பாயுமா ?
X

பைல் படம்.

ஆதம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனைத்து மதுக்கடையிலும் நள்ளிரவிலும் மது விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறது.

சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனைத்து மதுக்கடைகளும் அரசு நிர்ணயித்த நேரத்தை தாண்டி செயல்பட்டு வருகிறது. மேலும் பார் உரிமையாளர்கள் சட்டவிரோதமாக மதுக்கடையில் அதிக மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து சட்ட விரோதமாக 24 மணி நேரம் அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்கின்றனர். இதனை காவல் துறையினர் யாரும் கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெரும்பாலும் நடக்கும் குற்றச்சம்பவங்கள் பின்னணியில் இருப்பது இந்த மது போதை தான். இதனை இரவு நேரங்களில் காவல் துறை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் வைக்கின்றனர். ஆதம்பாக்கம் காவல் நிலையம் அருகில் இருக்கும் பார்களில் இரவு முழுவதும் விற்பனை படு ஜோராக நடைபெறுகிறது.

Tags

Next Story
ai future project