/* */

கேரள சிறுமிகளின் ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக கூறி மிரட்டியவர் கைது

கேரள சிறுமிகளின் ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக கூறி மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கேரள சிறுமிகளின் ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக கூறி மிரட்டியவர் கைது
X

கைது செய்யப்பட்ட மார்க் டி குரூஸ்.

சென்னை புனித தோமையர் மலை மாகாளி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் மார்க் டி குரூஸ்(19), இவர் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் பல பெண்களிடம் பழகி வந்துள்ளார்.

இந்தநிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளுடன் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் மார்க் டி குரூஸ் அறிமுகமாகி அவர்களுடன் பழகி அவர்களின் ஆபாச புகைப்படங்களை பெற்றுள்ளார்.

இந்நிலையில் அவர்களின் புகைப்படங்களை வைத்துக்கொண்டு சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாகவும் குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பி விடுவதாகவும் மிரட்டி வந்துள்ளார்.

இவரின் மிரட்டலையடுத்து சிறுமிகள் அவர்களின் பெற்றோர்களிடம் கூற பெற்றோர் கேரள மாநிலம் சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து புகாரை தமிழக போலீசாருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க கேரள போலீசார் கேட்டுக்கொண்டனர்.

புகாரை பெற்றுக் கொண்ட புனித தோமையர் மலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மார்க் டி குரூஸ் ஐ கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு அவரிடமிருந்து ஒரு செல்போனை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட மார்க் டி குரூஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு. சிறையில் அடைக்கப்பட்டார்

Updated On: 25 April 2022 5:34 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  2. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  3. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  4. மயிலாடுதுறை
    மயிலாடுதுறையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு..!
  5. வானிலை
    தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்
  6. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  8. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  9. வீடியோ
    சபையில் வைத்து கிழிக்கப்பட்ட ஐ.நா தீர்மானம் | இது தான் காரணமா ?...
  10. ஈரோடு
    கோபியில் கல்லூரிக் கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியர்...