ஆதம்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை கொள்ளை

ஆதம்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை கொள்ளை
X

 நகை கொள்ளை போன வீடு.

ஆதம்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை கொள்ளையடித்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சென்னை ஆதம்பாக்கம், பார்த்தசாரதி நகர் 2வது தெருவில் வசித்து வருபவர் ஜெயலஷ்மி (70), இவரது மூன்று பிள்ளைகளும் சிங்கப்பூரில் உள்ளனர். அவர்களை பார்ப்பதற்காக கடந்த நவம்பர் மாதம் 1ம் தேதி வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில், இன்று எதிர்வீட்டில் உள்ள சதீஷ்குமார் என்பவர் பார்த்தபோது, வீட்டின் கிரில் கதவு மற்றும் மரக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு, வீட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். வீட்டினுள் இருந்த இரண்டு பீரோவை உடைத்து 20 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
அதன் பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆதம்பாக்கம் போலீசாரும், கைரேகை நிபுணர்களும் வந்து கைரேகை பதிவுகளை சேகரித்தனர். போலீசார் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி