சென்னையில் போதை பொருள் விற்ற நைஜீரிய வாலிபர் உள்பட 5 பேர் கைது

சென்னையில் போதை பொருள் விற்ற நைஜீரிய வாலிபர் உள்பட 5 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட 5 பேர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 100 கிராம் போதை பொருள், ரூ.51 ஆயிரம் பணம், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை மற்றும் புறநகரில் மெத்தம் பெட்டமைன் வகையை சேர்ந்த, போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதனடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் கண்காணித்த போது கத்திப்பாரா அருகே சந்தேகத்தின் பேரில் சுற்றிய நாகப்பட்டினத்தை சேர்ந்த விஜய்(27), ஆதம்பாக்கத்தை சேர்ந்த சீராளபதி(26), திருச்சியை சேர்ந்த நந்தகுமார்(26) ஆகியோரை மடக்கி பிடித்தனர்.

நந்தகுமார் ஆலந்தூரில் தங்கியிருந்து கேட்டரிங் வேலை பார்த்து வந்தார். சீராளபதி தனியார் மருந்தகம் ஒன்றிலும் விஜய் தனியார் நிறுவனத்திலும் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் பெங்களூரில் இருந்து கிறிஸ்டல் போதை பொருளை கடத்தி வந்து தண்ணீரில் கலந்து ஊசி முலம் விற்று வந்தது தெரியவந்தது. இவர்கள் தந்த தகவலின் பேரில் கன்னியாகுமரியை சேர்ந்த அருண்பாண்டியன்(27), என்பவரை பிடித்தனர். இவர்களுக்கு பெங்களூரில் போதை பொருளை சப்ளை செய்யும் வாலிபரை சென்னைக்கு வரவழைத்து பிடித்தனர். விசாரணையில் நைஜீரியாவை சேர்ந்த அகஸ்டின்(29) என தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 100 கிராம் போதை பொருள், ரூ.51 ஆயிரம் பணம், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்