வீட்டின் பூட்டை உடைத்து திருடிய நபர் கைது

வீட்டின் பூட்டை உடைத்து  திருடிய நபர் கைது
X

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த நபர்

பழவந்தாங்கல் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய நபரை போலீஸார் கைது செய்தனர்

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த நபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை, நங்கநல்லுார், அய்யப்பன் நகர், துரைசாமி கார்டனை சேர்ந்தவர் ஸ்ரீதர்(61), கடந்த ஆண்டு, ஜூலை மாதம் இவரது வீட்டின் பூட்டை உடைத்து, 41 சவரன் தங்க நகை திருடப்பட்டது.இது குறித்து அளித்த புகாரின் பேரில் பழவந்தாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். ஸ்ரீதர் வீட்டு சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதன்வாயிலாக இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பத்தை சேர்ந்த செந்தில்முருகன்(29), என்பது தெரியவந்தது. பழைய குற்றவாளியான இவர் மீது, பழவந்தாங்கல், பண்ருட்டி காவல் நிலையங்களில் ஐந்து திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது.இதையடுத்து, அவரிடம் இருந்து மூன்று சவரன் தங்க நகைகளை கைப்பற்றிய போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி