கொரோனா பாதிப்பு, ஸ்மைல் கடன் திட்டம், காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி தகவல்
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி ( பைல் படம்)
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் , பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவரின் குடும்பத்தில் வருமானம் ஈட்டக் கூடிய நபர் பலர் உயிரிழந்துள்ளனர்.
அவ்வாறு உயிரிழந்திருப்பின் அவர்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார வளர்ச்சி கழகம் "SMILE" என்ற கடன் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
குடும்ப வருமானம் ஈட்டக் கூடிய நபரின் வயது 18 முதல் 60 க்குள் இருக்க வேண்டும்.இத்திட்டத்தில் அதிகபட்சமாக திட்டக் கொள்கை ரூ.5.00 லட்சம் வரை இருக்கலாம்.திட்டத் தொகையில் 80 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.4.00 இலட்சம் வரை கடன் வழங்கப்படும்.
மீதமுள்ள 20 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.1.00 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். ஆண்டுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் தொகை வழங்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர்,
குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடியவர் கொரோனா வைரஸால் உயிரிழந்ததற்கான ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu