சென்னையில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் மீது மோதிய ஆட்டோ டிரைவர் கைது

சென்னையில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் மீது மோதிய ஆட்டோ டிரைவர் கைது
X

கைது செய்யப்பட்ட சுதர்சனம்.

சென்னையில் போக்குவரத்து போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் மீது மோதிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை நந்தம்பாக்கம் அடுத்த மணப்பாக்கம் சிக்னலில் கடந்த 3ஆம் தேதி காவல் உதவி ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது வேகமாக வந்த ஆட்டோ ஒன்று காவல் உதவி ஆய்வாளரை மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. படுகாயமடைந்த பொன்ராஜ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு நாள் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பியுள்ளார்.

காவல் உதவி ஆய்வாளர் பொன்ராஜ் மீது ஆட்டோவை வேகமாக மோதிவிட்டு தப்பிச் செல்லும் சி.சிடி..வி. காட்சிகளும் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில் விபத்து ஏற்டுத்திய ஆட்டோ ஓட்டுநர் போரூரை சேர்ந்த சுதர்சனம்(65), என்பவரை கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் பயணிகள் நின்றால் அடித்துவிடுவார்கள் என பயமுறுத்தி நிற்காமல் செல்லும் படி அறிவுறுத்தியதால் நிற்காமல் சென்றதாகவும், பின்னர் வீட்டிற்கு சென்று தனது மகனிடம் கூறி பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து கைதானதாகவும் தெரியவந்தது.

Tags

Next Story
ai marketing future