ஜி.எஸ்.டி சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து விபத்து

X
ஜி.எஸ்.டி சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்.
By - S.Kumar, Reporter |3 Dec 2021 8:00 PM IST
சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. அதிஷ்டவசமாக காரில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.
சென்னை கீழ்கட்டளையை சேர்ந்தவர் ரோஜர்(38), இவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் கீழ்ப்பாக்கத்தில் நடைபெறும் உறவினர் வீட்டு திருமணத்திற்கு செல்வதற்காக தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் கீழே செல்லும் போது வாகனத்தின் முன் பகுதியில் இருந்து அதிகளவில் புகை வர துவங்கியது. உடனே சுதாரித்துக் கொண்டவர் தனது குடும்பத்தோடு காரை சாலையோரம் நிறுத்திவிட்டு இறங்கி விட்டனர்.
சிறிது நேரத்தில் கார் முழுவதும் எரிந்து சேதமானது. தகவலறிந்து விமான நிலையத்தில் இருந்து வந்த தீயணைப்பு வாகனம் தீயை போராடி அணைத்தனர். சம்பவம் தொடர்பாக மீனம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu