ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற நடிகர் விஜய் மன்ற செயலாளர்

ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற நடிகர் விஜய் மன்ற செயலாளர்
X

ஒருவாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற நடிகர் விஜய் மன்ற செயலாளர் பிரபு

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் கருப்படித்தட்டை ஊராட்சி 1வது வார்டு உறுப்பினராக நடிகர் விஜய் மன்ற செயலாளர் பிரபு ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார்.

காஞ்சிபுரம் மாவட்டம் - கருப்படித்தட்டை ஊராட்சி காந்தி நகர் 1வது வார்டு உறுப்பினர் தேர்தலில் விஜய் ரசிகர் மன்ற நகர செயலாளர் பிரபு ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

காஞ்சிபுரம் ஒன்றியம் பாலுசெட்டிசத்திரம் அருகே கருப்படித்தட்டை காந்தி நகர் 1வது வார்டு உறுப்பினர் தேர்தலில் நடிகர் விஜய் ரசிகர் மன்ற நகர செயலாளர் பிரபு, முத்துசாமி, தினேஷ்குமார், சக்தி வேல் ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில் பிரபு 65 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். இரண்டாவது இடத்தை 64 வாக்குகள் பெற்ற வேட்பாளரும், 63 வாக்கு பெற்ற வேட்பாளர் மூன்றாவது இடத்தையும், 25 வாக்குகளை பெற்ற வேட்பாளர் நான்காம் ,இடத்தையும் பிடித்தனர்.

ஒரே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் உடன் போட்டியிட்ட மற்ற வேட்பாளர்கள் மீண்டும், மீண்டும் வாக்கை எண்ண வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அப்படி எண்ணப்பட்டதில் பிரபு ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!