காஞ்சிபுரம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : 156 பதவிகளுக்கு 778 பேர் போட்டி

காஞ்சிபுரம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : 156 பதவிகளுக்கு 778 பேர் போட்டி
X
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 210 பேர் வேட்புமனு வாபஸ் பெற்றனர். 156 பதவிகளுக்கு 778 பேர் போட்டி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த வாரம் துவங்கி 1001 பேர் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இரு தினங்களுக்கு முன் பரிசீலனை செய்யப்பட்ட 2 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 999 மனுக்கள் ஏற்றுக் கொள்ளபட்டது.

திங்கட்கிழமையான இன்று மாலை 3 மணிக்குள் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 210 மனுக்கள் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் வாபஸ் பெறப்பட்டது.

இறுதி கட்ட நிலவரப்படி :

காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 பதவிகளுக்கு 314 நபர்களும்,

குன்றத்தூர் நகராட்சி 30 பதவிகளுக்கு 122 நபர்களும்,

மாங்காடு பேரூராட்சி இருபத்தி ஏழு பதவிகளுக்கு 129 நபர்களும் ,

வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கு 58 நபர்களும் ,

உத்திரமேரூர் பேரூராட்சியில் 18 வார்டுகளுக்கு 74 நபர்களும் ,

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள 15 வார்டுகளுக்கு 81 நபர்களும் போட்டியிடுகின்றனர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 156 பதவிகளுக்கு 778 பேர் தற்போது களத்தில் போட்டியிடுகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!