நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: காஞ்சிபுரத்தில் 13 பேர் மனு தாக்கல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: காஞ்சிபுரத்தில் 13 பேர் மனு தாக்கல்
X

வேட்புமனு தாக்கல் செய்யும் சுயேச்சை வேட்பாளர் 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இன்று மொத்தம் 13 சுயேச்சைகள் மனு தாக்கல் செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி , 2 நகராட்சி , 3 பேருராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது.

முதன் இரு நாளில் ஒரு வேட்பு மனுக்கள் கூட தாக்கல் செய்யாத நிலையில் இன்று மொத்தம் 13 வேட்பு மனுக்களை சுயேச்சை வேட்பாளர்கள் தாக்கல் செய்தனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 2 நபர்களும், மாங்காடு நகராட்சியில் 3 நபர்களும், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 6 நபர்களும், உத்திரமேரூர் பேரூராட்சியில் 2 நபர்கள் தாக்கல் செய்தனர்.

பிப்ரவரி 4ம் தேதி இறுதி வேட்பு மனு தாக்கல் நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!