கர்மவீரர் காமராஜர் கவிதைகள் படிப்போம்... அவர் வழியில் வாழ்வில் நடப்போம்!

Kamarajar Kavithai Tamil
X

Kamarajar Kavithai Tamil

Kamarajar Kavithai Tamil-கர்மவீரர் காமராஜர் புகழ்பாடும் கவிதைகளை பற்றி தெரிந்துக்கொள்வோம். புதிய கவிதைகளைப் படைப்போம்.

Kamarajar Kavithai Tamil

"தமிழ்நாட்டின் கிங்மேக்கர்" என்று அன்புடன் அழைக்கப்படும் காமராஜ் ஒரு முக்கிய அரசியல் பிரமுகர் மட்டுமல்ல, ஒரு சிறந்த தலைவர். காமராஜர் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15 ம் தேதி இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் என்ற எளிய கிராமத்தில் பிறந்தார். அவர் ஒரு சாதாரண பின்னணியில் இருந்து வந்தவர் மற்றும் அவரது ஆரம்பகால வாழ்க்கையில் பல கஷ்டங்களை எதிர்கொண்டார். சாமானிய மக்களின் போராட்டங்கள் மற்றும் சமூக நீதிக்கான அவசியத்தைப் பற்றி அறிந்து, அவர்களது துயர் தீர்க்க பாடுபட்டார். தனது வாழ்வின் இறுதி வரை, எளிமையின் வடிவமாக வாழ்ந்தார்.

அவரை பற்றி சில கவிதைகளைப் பார்ப்போம்.

மனிதருள் மாணிக்கமே

பெருந்தலைவா..

என் காமராஜரே..

உன் போல் உயர்ந்தவர்

இனியொருவர் பிறப்பாரோ?

சட்டங்கள் கற்றதில்லை

பட்டங்கள் பெற்றதில்லை

திட்டங்கள் பலகோடி

தந்திட்ட அறிவுப் பெட்டகமே!

மெட்டு: கருப்பு நிலா நீதான் கலங்குவதேன்...

கருப்பு நிலா..... கருப்பு நிலா....

கருப்பு நிலா நீதான் மறைந்தது ஏன்...

பகலவனாய் மனதில் நிறைந்தது ஏன்...

கல்விக் கண்ணைத் திறந்து வைத்து அறியாமையை அகற்றிவிட்டாய்..

ஏழைக் குடும்பங்கள் வாழ்வினிலே ஒளி விளக்கை ஏற்றி வைத்தாய்...

எட்டு திசையாவும் மக்கள் நலன் காத்த காமராசர் நீதானே...

சரணம் - 1

விருதுப்பட்டி நகரினிலே தமிழ்மகனாய் பிறந்தாயே...

நாட்டு மக்கள் மனதில் என்றும் தலைமகனாய் வாழ்ந்தாயே...

மாநிலத்தின் வளர்ச்சிக்கு உறங்காமல் உழைத்தாயே...

நானிலமே போற்றும் வகையில் திட்டங்களை விதைத்தாயே...

வானம் உள்ள காலம் ...வரலாறும் உனைக் கூறும் நேர்மையின் முழு தேகமே உனை நாளும் மறவோமே..

(கருப்பு நிலா...)

சரணம் - 2

தொழிற்துறையில் மாற்றம் தந்து புரட்சிகளைச் செய்தாயே...

எழிற்கொஞ்சும் அணைகள் தந்து வளம் கொழிக்கச் செய்தாயே...

பட்டி தொட்டி எங்கெங்கும் பள்ளிகளைத் திறந்தாயே...

பசியுமின்றி பாடம் கற்க மதிய உணவும் தந்தாயே...

வானம் உள்ள காலம் ... வரலாறும் உனைக் கூறும்..

ஏழையின் பங்காளனே உனை நாளும் மறவோமே... கருப்பு நிலா..)

மீண்டும் எப்பொழுது வருவீர் காமராசரே...!

இந்தியத் தாயின்

காலில் பிறந்தவன்

தலை யாரென்று

தீர்மானித்தவன்..!

இவன்

கைத்தூய்மையால்

கை உயர்ந்தது

தமிழகத்தில்..!

பிறருக்கோ

எழுத்துக்களை மட்டும்

படிக்கும் கண்ணாடி..!

இவருக்கோ

இவரின்

நேர்மை பேசும்

கண்களையும் படித்தது..!

வெள்ளாடையுடுத்தி

பவனி வந்த

ஆண் கலைமகள்..!

நல் இதயம் கொண்டவன்

பாடசாலையில்

தீனி போட்டான்

மூளைக்கும் வயிற்றுக்கும்..!

மலைகளையும் அணைத்தான்

மழலைகளையும் அணைத்தான்..!

ஊர் தோறும்

இவன் திறந்த

அறிவுத் திருக்கோயிலில்...!

குழந்தைகள் ஓதினர்

'அ' ன்னா! 'ஆ' வன்னா!

மந்திரங்களை..!

வானத்தைப் போல

உயர்ந்தவன்...!

கார்மேகத்தைப் போல

கருத்தவன்...!

பனித்துளியைப் போல

சிரித்தவன்...!

நிழல் தரும்

மரம் போல

அரவணைத்தவன்...!

எறும்பைப் போல

உழைத்தவன்

கரும்பைப் போல

இனித்தவன்...!

நீர் வங்கி

கட்டியவன்

கண்ணீரைத்

துடைத்தவன்...!

ர் கலப்பையால்

நிலத்தையும்

எழுதுகோலால்

மூளையையும்

கிளரச் செய்தான்...!

பச்சைப் பட்டாடை

உடுத்திய நிலமகள் கண்டு

மனம் மகிழ்ந்தவன்...!

கூரையின் மேலமர்ந்த

பறவையைப் போல்

மகிழ்ச்சியாக வாழ்ந்தான்

எளிமையாக...!

இவன் திறந்த

கோயிலில்

எந்த சாதிக்கும்

தடையில்லை...!

எந்த மதத்திற்கும்

சொந்தமில்லை

இங்கே எச்சாதியினரும்

அர்ச்சகராகலாம்..!

உழவுக்கும்

தொழிலுக்கும்

வந்தனை செய்தவன்...!

புண்ணியங் கோடியாக

ஏழைக்கு எழுத்தறிவித்தவன்...!

கோடி கோடியாக

சேர்த்தான்

வான் நீரையும்...!

நற்பெயரையும்...!

உயரம் போல்

இவன் பிடித்த செங்கோலும்

இன்று வரை

ஆச்சர்யக் குறியாகவே நிற்கிறது..!

பிழை செய்த மக்கள்

ஐம்பது ஆண்டுகள் தாண்டியும்

தவங்கிடக்கிறார்கள்

மீண்டும் ஒரு

காமராசர் வேண்டி...!

விருதுகளின் நாயகர்..!

ஆனித் திங்கள் பிறந்தவராம்!

அகிலம் போற்ற உயர்ந்தவராம்!

விருது நகர்தனில் உதித்தவராம்!

விருதுகளின் நாயகராம்!

வறுமை பிடியில் இருந்தவராம்!

வையம் வணங்கிட வாழ்ந்தவராம்!

மதிய உணவு வழங்கியவராம்!

மக்கள் பசியைப் போக்கியவராம்!

எளிமையின் உருவம் கொண்டவராம்!

ஏழையின் துயரை துடைத்தவராம்!

கல்வி தரத்தை உயர்த்தியவராம்!

கருணை உள்ளம் உடையவராம்!

பாசனத் திட்டம் தந்தவராம்!

பாரினை செழிக்க வைத்தவராம்!

கர்ம வீரர் என்றிவரை நித்தம் நாமும் பொற்றிடுவோம்!

காமராசர்

பல பேரறிவு கொண்ட மாணவர்கள் மனதில்

நம்பிக்கை நாயகனாய் இவர் முகம் மட்டுமே….

சூலை மூவைந்தில் விருதுபட்டியில் எளியோனாய்

சிவகாமி மைந்தனாய் மண்ணில் அவதரித்தாய் .!

அபிராமி அந்தாதியாய்

அகிலமெங்கும்

ஒளியானாய் .!

காமாட்சியாய் குலமான குலசாமியும் நீயே !

காமராசாய் வளமான

ராசாவும் நீயே !

கம்பிக்குள் வாழ்ந்த கம்பீரமும் நீயே !

குலக்கல்வி ஒழித்து நலக்கல்வி தந்தாய் .!

இலவசக்கல்விஅளித்து நல்லுணவை ஈந்தாய் .!

கல்வி ஒளிவிளக்கு உன்னாலே ஒளிர்ந்தது ...

கல்லாமை அறியாமை

தன்னாலே அகன்றது ...

எதிர்த்தோரை

ஏணியாக்கிய கலிங்கத்துப்பரணி

நீயே !

கீழோரை

மேலோராக்கிய பெரியபுராணமும் நீயே !

திட்டங்கள் தீட்டுவதில் எந்நாளும் பிதாமகன் ..

துயரங்கள் நீக்குவதில் எப்பொழுதும் உழவன் மகன் ..

நீர்ப்பாசனத் திட்டத்தால் கண்ணீர் அருகியது ...

மின்சாரத்திட்டங்களால் இருளும் நீங்கியதே .!

உழவாரப் பணிகளால் வேளாண்மையும் ஓங்கியதே .!

அணைகளைப்பெருக்கி உழவினை அரவணைத்தாய் ..

தடைகளைத் தகர்த்துச் சட்டங்களை வகுத்தாய் ..

வாய்க்காலுக்கு வாயிருந்தால்

நாளெல்லாம் புகழ்பாடும் ...

ஒளிரும் வெற்றியில் மயங்காது நின் கதராடை

தோல்வியில் கலங்காது நின்

மனவோடை ..

உதவியைக்

கருணையாக்கும் மக்களின் முதல்வர் ...

பதவியைத் துறந்து வழிகாட்டுவதிலும்

முதல்வர் ...

வறியோரின்

மனதினைப் படித்த படிக்காத மேதை !

புகழுக்கு மயங்காத கர்மவீரர் மனதளவில் குழந்தை !

உனதாட்சி ஏழைகளின் கண்ணாடி மனசாட்சி !

மறைந்தும் வாழ்கிறாய் அணையா விளக்காய் ...

படிக்கும் குழந்தையின் வாழ்க்கையில் ஒளிவிளக்காய் ...

மீண்டும் பிறவாயோ நானிலமும் பயனுறவே .!

விருதுபட்டியின் வைரமே!

மனதருள் மாணிக்கமே!

உன்னைப் போல் உயர்ந்தவர் இனி ஒருவர் பிறப்பாரோ!

எண்ணமோ உயர்வு!

எளிமையான வாழ்வு!

கல்வியறிவோ குறைவு!

ஆனால் நீ காலூன்ற துறையோ குறைவு!

சட்டங்கள் கற்றதில்லை!

பட்டங்கள் பெற்றதில்லை!

திட்டங்கள் பல கோடி தந்திட்ட அறிவுப் பெட்டகமே!

சத்தியமூர்த்தியின் தளபதியே!

கல்விக்கண் கொடுத்த படிக்காத மேதையே!

உணவுத்திட்டம் வகுத்த மகத்தானவரே!

அனைகளைக் கட்டிய வல்லுனரே!

தலைவர்களை உருவாக்கிய பெருந்தலைவரே!

தரணியை தழைக்கச் செய்த நாயகனே!

வெள்ளை உள்ளம் கொண்ட கருப்பு காந்தியே!

சமூக நீதி, கல்வி மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றில் அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்புக்கான சான்றாகும். எளிமையான மற்றும் சக்திவாய்ந்த வார்த்தைகள் மூலம், அவர் மிகவும் சமமான மற்றும் நியாயமான சமூகத்திற்கான தனது பார்வையை வெளிப்படுத்தினார். அவர் உத்வேகத்தின் ஆதாரமாகவும், தமிழ்நாடு மற்றும் ஒட்டுமொத்த தேசத்தின் மீதான அவரது நீடித்த தாக்கத்தின் பிரதிபலிப்பாகவும் உள்ளது. ஒரு தலைவராகவும், அரசியல்வாதியாகவும் காமராஜரின் பாரம்பரியம் வரும் தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் உணவுகள் – எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் தெரியுமா?