பிறந்தநாள் கொண்டாடும் கமல்: ரசிகர்களிடம் கேட்ட பரிசு என்ன தெரியுமா

பிறந்தநாள் கொண்டாடும் கமல்: ரசிகர்களிடம் கேட்ட பரிசு என்ன தெரியுமா
X
உலக நாயகன் கமல்ஹாசன், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு உதவுவதே எனக்கு தரும் பரிசு என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நடிகரும் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், இன்று தனது 67 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதை, அவரது ரசிகர்ளும், மக்கள் நீதிமய்யம் கட்சியினரும் கொண்டாடி வருகின்ற்னார். கமலுக்கு வாழ்த்து சொல்லும் விதமாக ட்விட்டரில் #HBDKamalHassan என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


கவிஞர் கவிஞர் வைரமுத்து தனது வாழ்த்து கவிதையில்,"எம்.ஜி.ஆர் பற்றிக் கலைஞர் சொன்னதுபோல் கமல் பற்றி நானும் சொல்லலாம்: "என் நாற்பதாண்டுகால நண்பர்" தனிவாழ்வு கலைவாழ்வு பொதுவாழ்வு மூன்றிலும் பட்டுத் தெளிந்த பட்டறிவாளர். வெற்றி தோல்வி அவரை என்செய்யும்? தலைகீழாய்ப் பிடித்தாலும் மேல்நோக்கி எரியும் தீச்சுடர் எரி சுடரே எழு சுடரே!" என்று கூறியுள்ளார்.

இதேபோல், நடிகர் ஆர்யா, நடிகை கஸ்தூரி உள்ளிட்ட பல திரைத்துறை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பலரும், நடிகர் கமலுக்கு வழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, கமல் வெளியிட்டுள்ள பதிவில், மநீம உறவுகளே, வெள்ளத்தால் தவிக்கும் மக்களுக்கு உதவிகளை செய்யுங்கள்; அதுதான் எனக்குத் தரும் பிறந்தநாள் பரிசு என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி