திருக்கோவிலூர் அருகே காருடன் ஆற்றில் அடித்துச் சென்றவர் சடலமாக மீட்பு

திருக்கோவிலூர் அருகே காருடன் ஆற்றில் அடித்துச் சென்றவர் சடலமாக மீட்பு
X

பைல் படம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே காருடன் ஆற்றில் அடித்துச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் தனது காரில் திருக்கோவிலூர் அருகே உள்ள மொகளார் பாலத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மூன்று நாளாகியும் மீட்பு பணிகள் தொடர்ந்து வந்தது. ராட்சத கிரேன் இயந்திரங்கள் கொண்டு தேடுதல் பணி நடைபெற்று வந்தது.

இதனைத்தொடர்ந்து, தீயணைப்பு துறையினரும் மற்றும் காவல் துறையினரும் தேடிவந்த நிலையில் முருகன் உடல் காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது.

Tags

Next Story
ai marketing future