உளுந்தூர்பேட்டை அருகே வீட்டில் பதுக்கிவைத்திருந்த 25 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

உளுந்தூர்பேட்டை அருகே வீட்டில் பதுக்கிவைத்திருந்த 25 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி.

உளுந்தூர்பேட்டை அருகே வீட்டில் பதுக்கிவைத்திருந்த 25 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே எதளவாடி கிராமத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதனையடுத்து, உளுந்தூர்பேட்டை போலீசார் எதளவாடி கிராமத்தில் கண்ணன் என்பவர் வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு 25 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!